பிளாஸ்டிக் குப்பைகள்

Update: 2022-08-08 13:50 GMT
மயிலாடுதுறை பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் சாலையோரத்தில் தேங்கி கிடக்கின்றன. இதன் காரணமாக மழைநீர் பிளாஸ்டிக் பைகளில் தேங்கி நின்று நாளடைவில் கழிவுநீராய் மாறிவிடுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்