காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வரதராஜபுரம் பகுதியில் குப்பைகள் சேர்ந்து குப்பை மேடாக காட்சி தருகிறது. குப்பை தொட்டி நிரம்பியதால் சாலை முழுதும் குப்பைகள் சிதறி அந்த பகுதியே அலங்கோலமாக இருப்பதுடன் துர்நாற்றமும் வீசி வருகிறது. தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?