தர்மபுரி நகரின் மையப்பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி முன்பு குப்பைகளை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்த பகுதியில் பலர் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதனால் பள்ளி முன்பு குப்பை கிடங்கு போன்று காணப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு குப்பை கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
-கார்த்திக்,தர்மபுரி.