மயிலாடுதுறை மாவட்டம் வடகரை இக்பால் தெருவையும், ஜவகர் தெருவையும் இணைக்கும் சாலையோரத்தில் குப்பைதொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத்தொட்டி முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் குப்பைதொட்டிக்குள் கொட்டப்படும் குப்பைகள் வெளியே சிதறி குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளால் அந்த இடம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், புதிய குப்பைதொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?