விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராம் முத்தாலம்மன் கலை அரங்கம், பஞ்சாயத்து அலுவலகம் முன்பகுதியில் குப்பைகள் சூழ்ந்து காணப்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்றாததால் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையை கடந்து செல்லும் மக்கள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.