விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு சுகாதார அலுவலகம் அருகில் வாருகால் முழுவதும் குப்பை அகற்றப்படாமல் உள்ளது. மாதக்கணக்கில் குப்பை சேருவதால் கொசுக்கள் உருவாகி சுகாதாரக்கேடு ஏற்படுகின்றது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.