குப்பை கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-05 14:52 GMT
பெங்களூரு சேஷாத்திரிபுரம் ஐயங்கார் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் பழமையான மின்இணைப்பு பெட்டி உள்ளது. அந்த பெட்டியின் அருகே சிலர் மரக்கட்டைகள், விறகு போன்றவற்றை போட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிலர் குப்பை கழிவுகளையும் வீசி வருகிறார்கள். அங்கு குப்பை கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை சுத்தம் செய்து குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்