நாமக்கல்லில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. அந்த மேம்பாலத்தின் கீழே அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். சிலர் அங்கு முட்டை கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அவை நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே தினந்தோறும் அந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.
-கார்த்திக், நாமக்கல்.