தேங்கி கிடக்கும் குப்பை

Update: 2022-08-04 16:37 GMT

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8-வது வார்டு பாலமுருகன் கோவில் அருகே சாலையில் குப்பைகள் அதிக அளவில் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகம் குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே சாலையில் குவிந்த குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்