கடலூர் மஞ்சக்குப்பத்தில் இருந்து உப்பலவாடி செல்லும் சாலையோரம் பல்வேறு இடங்களில் தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை காலை மற்றும் மாலை நேரங்களில் அள்ளுவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.