கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. சாலையோரம் பொதுமக்கள் குப்பை கொட்ட வசதியாக இரும்பு தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அவை பெரும்பாலும் உடைந்து காணப்படுகின்றன. இதனால் அதில் குப்பை கொட்டினாலும் வெளியே வந்து விழுகிறது. அதை தெருநாய்கள் இழுத்து சாலை வரை சிதறடித்து செல்கின்றன. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. எனவே குப்பை தொட்டிகளை மாற்ற வேண்டும்.