சிவகங்கை மாவட்டம் 20-வது வார்டு பொற்கை பாண்டியன் தெருவில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் தேங்கிய குப்பைகளில் இருந்து தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை அவ்வப்போது அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.