தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-08-02 15:25 GMT

தஞ்சை கீழவாசல் பகுதி சின்னகடைதெருவில் மாநகராட்சி நடுநிலை பள்ளி அருகே குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைத்தொட்டியை சுற்றி குப்பைகள் சிதறிக்கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக மாணவ-மாணவிகள் மூக்கை மூடியபடி பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி சிதறிக்கிடக்கும் குப்பைகளால் அந்த பகுதிக்கு கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்