குடமுருட்டி ஆற்றங்கரையில் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-02 13:09 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதி குடமுருட்டி ஆற்றங்கரையில் அரசு மதுக்கடைக்கு தினமும் ஏராளமான மதுப்பிரியர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆற்றங்கரை அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் டம்ளர்கள், மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் ஆற்றங்கரை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிந்து வருகின்றன. இவற்றில் மழைநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாக வழிவகை செய்கிறது. மேலும், ஆற்றங்கரை பகுதியில் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், இனிவரும் காலங்களில் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்