தஞ்சை ஆட்டுமந்தை தெரு சாலை தட்டான் தெருவில் சாலையில் இடையூறாக குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குப்பைகள் சிதறி சாலை முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்து கிறது. மேலும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மூக்கை மூடியபடி அந்த பகுதியை கடந்து சென்று வருகின்றனர். குப்பைத்தொட்டி சாலையில் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றவும், குப்பைத்தொட்டியை சாலையோரத்தில் வைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?