சுகாதார சீர்கேடு

Update: 2022-07-31 11:14 GMT

தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் மழைநீர் வடிந்து செல்ல வடிகால் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் மார்க்கெட் முழுவதும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், மழைநீர் வடியாததால் கழிவுநீராய் மாறிவிடுகிறது. இதனால் கழிவுநீரில் நடந்து சென்று பொதுமக்கள் காய்கறி வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி காய்கறி கழிவுகளும் கழிவுநீரில் கலந்து அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர்  தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்