குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-30 14:07 GMT

கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கவர்கள், கேரி பேக்குகள், கப்புகள் மற்றும் அழுகிய காய் கறிகள் என பல்வேறு கழிவுகளையும் கடைக்காரர்கள் தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிகளையும் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு கொண்டு வந்து தார்சாலை ஓரத்தில் போட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்