ஆறுமுகபுரம் என்ற கிராமம் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்டது. இங்கு சார் பதிவாளர் சாலையின் பக்கங்களிலும், டாக்க ர் குளம் மற்றும் அண்ணாவி குள களுக்கு நீர் கொண்டு வரும் கால்வாயின் பக்கங்களிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தினசரி கொட்டுகிறார்கள். மற்றும் அண்ணாவிக் குளம் கரை ஓரங்களிலும் குப்பைகளை தினசரி கொட்டுகிறார்கள். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குளத்தில் உள்ள தண்ணீர் மாசடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குப்பையை அகற்றுவதற்கும் மற்றும் இந்த குப்பைகள் மேலும் கொட்டுவதை தடுப்பதற்கும் ஆவன செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன்.