தேனி அருகே ஸ்ரீரெங்காபுரம் கிராமத்தில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து அழிக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. சாலையோரம் எரிந்தும், எரியாமலும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே, சாலையோரம் குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும். அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம், சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.