கிருஷ்ணகிரி நகரில் இருந்து மகராஜகடை செல்லும் சாலையில் பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த சாலை ஓரங்களில் பல இடங்களில் குப்பைகள் மூட்டை மூட்டையாக கட்டி வீசப்பட்டுள்ளன. இதனால் சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இறைச்சி கடையில் உள்ள கழிவுகள் மூட்டைகளில் கட்டி அந்த பகுதியில் வீசப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ் ,கிருஷ்ணகிரி