திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் பெருமாள் கோவில் தெருவில் குப்பைகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் இந்த பகுதியில் குப்பைகள் நிறைந்து அலங்கோலமாக காட்சி தருகிறது. மேலும் இந்த பகுதியை கடந்து செல்லும் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதால் விரைவில் இந்த குப்பைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.