திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்திலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் பாதையில் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் இந்த பாதையில் செல்லும் நீர் அசுத்தமாக மாறி வருகிறது. மேலும் நீர் செல்லும் பாதையில் தெர்மாகோல், அட்டைகள் போன்ற கழிவுகள் இருப்பதால் தண்ணீர் வரத்து தடை படுகிறது. எனவே விரைவில் இந்த கழிவுகளை அகற்றிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?