அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-07-26 13:21 GMT
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள நாகர்கோயில் தெரு பகுதியில் சிலர் சாராயம் மற்றும் வெளி மாநில மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கிறார்கள். இவற்றை வாங்க நள்ளிரவு வரை இந்த பகுதியில் பலர் நடமாடுவதால் பெண்கள், பள்ளி மாணவ- மாணவிகள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி இந்த பகுதியில் மதுபானங்களை பதுக்கி விற்கப்படுவதை அதிகாரிகள் நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனியப்பன், தர்மபுரி.

மேலும் செய்திகள்