தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு உள்ள கட்டண கழிப்பிடம் சீரமைப்பு பணிக்காக கடந்த 1 மாதத்திற்கு முன்பு மூடப்பட்டது. கட்டண கழிப்பிடம் மீண்டும் திறக்கப்படாததால் பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆண்-பெண் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த கட்டணக் கழிப்பிடத்தை சீரமைத்து விரைவில் திறக்க வேண்டும். இந்த கழிப்பிட வளாகத்தின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை தூர்வாரி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.