குப்பை கிடங்காக மாறிய குளம்

Update: 2023-09-13 14:20 GMT
தியாகதுருகம் அருகே விருகாவூர் கிளை நூலகம் எதிரே குடியிருப்பு பகுதியில் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் தற்போது குளம் குப்பை கிடங்கு போல் காட்சி அளிப்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றி குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்