செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் உள்ள லட்சுமி அவன்யூ அன்னை தெரசா நகரில் உள்ள குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பையுடன் கழிவுநீரும் கலப்பதால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. நாள் முழுவதும் மக்கள் கொசு தொல்லையால் அவதிப்படுகின்றனர். சில குழந்தைகளுக்கு இதனால் காய்ச்சல் போன்ற நோய்களும் உண்டாகிறது. ஆகையால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.