தர்மபுரி டவுன் பஸ் நிலையத்திற்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை இந்த பஸ் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த குப்பைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவுநீர் தேங்கி நிற்காத வகையில் முறையாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.