தர்மபுரி நகரின் மையப்பகுதியில் தலைமை தபால் நிலையம் முன்பு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியே சுகாதார கேடாக காட்சி அளிக்கிறது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும். கால்வாய்க்குள் மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க அதன் மீது சிமெண்டு சிலாப்புகள் அமைக்க வேண்டும்.
- முத்து, தர்மபுரி.