சேலம் வடக்கு வாய்க்கால்பட்டறையில் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வாய்க்காலில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாராததால் இந்த நிலை நீடித்து வருகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. 2 மாதங்களாக தூர்வாராததால் அந்த பகுதி சுகாதா சீர்கேட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?