பெங்களூரு ராமமூர்த்திநகர் ஐ.டி.ஐ. காலனியில் கங்காதர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பை கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த ஏரி குப்பை கழிவுகளாக காட்சி அளிக்கிறது. மேலும் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதனால், ஏரியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேலும் ஏரியில் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்.