கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் அம்மன்கோவில், வலியகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் கழிவுநீர் ஓடையை தூர்வாரி மண்ணை அங்கேயே போட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள மண்களை அகற்றி விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.