செங்கல்பட்டு, பல்லாவரம் ஆடுதொட்டி கன்டோன்மென்ட் பம்ப் ஸ்டேஷன் வாசல் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்தநிலையில் கொசுக்கள் அதிகளவில் உருவாகிறது மற்றும் துர்நாற்றமும் அதிகளவில் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.