கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் பின்புறம் சித்திவிநாயகர் கோவில் மேற்கு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் காலப்போக்கில் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஓடையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
-மயூரி சீத்தாராமன், கொட்டாரம்.