திட்டக்குடி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பை அங்குள்ள வெள்ளாற்றங்கரையில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் வெள்ளாற்றின் ஓரத்தில் மலைபோல் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் ஆற்றுநீர் மாசடைவதால், அதை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?