பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூரில் கோவை சாலையின் ஓரத்தில் குப்பை கொட்டப்படுகின்றன. இவை மலை போல் குவிந்து கிடப்பதால் அந்த வழியே செல்லும் போது கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையை கடக்கும் போது கடும் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.