பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அரசு மகளிர் விளையாட்டு விடுதி செயல்படுகிறது. இதன் முன்பு சாலையோரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படாமல் அப்படியே விடப்படுவதால், குப்பைத் தொட்டி நிரம்பி குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கே ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.