தர்மபுரி மாவட்டம் நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட நெருப்பூரில் 10-க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நெருப்பூரில் குப்பை தொட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வைக்காமல், குப்பையில் வீசி உள்ள சம்பவம் இந்த பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை தொட்டிகளை பயன்பாட்டுக்கு வைக்க வேண்டும்.