மணவாளக்குறிச்சி சின்னவிளை கடற்கரைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பொழுது போக்கவும், கடலின் அழகை ரசிக்கவும் வருகை தருகின்றனர். ஆனால், இந்தபகுதியில் இருந்து கடியப்பட்டணம் செல்லும் கடற்கரை சாலையின் இரு பக்கமும் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு கொட்டுபவர்கள் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அருமை தங்கம், மணவாளக்குறிச்சி.