விருதுநகர் அய்யனார் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அதில் பெரும்பாலும் பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக கிடக்கிறது. குப்பைகள் அகற்றப்படாமலேயே தேங்கி கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர். எனவே குப்பைகளை அகற்றி கழிவு நீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.