செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வெங்கடேசபுரம் அண்ணா தெருவில் கடந்த 2 மாதங்களாக குப்பைகள் அகற்றப்படாமல் மொத்தமாக குவிக்கப்பட்டு உள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் குப்பைகள் அகற்றபடவில்லை. எனவே குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?