விருத்தாசலம்-சேலம் புறவழிச்சாலை, விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை, பழத்தோட்ட சாலை உள்ளிட்ட சாலையிகளின் ஓரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.