செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் காரனை புதுச்சேரில் சாலையில் உள்ள காலி இடத்தில் மலைபோல் குப்பைகள் கொட்டி கிடக்கிறது. இவை திடீரென தீப்பற்றி எரிவதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்துவரும் பொதுமக்கள் சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகளில் சிக்கிதவிக்கின்றனர். மேலும், துர்நாற்றம் ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.