தேனி தாலுகா அலுவலகம் அருகில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமின்றி கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கண்மாயில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுவதுடன், குப்பை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.