குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-21 11:54 GMT

அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் பொம்மன்பட்டியில் உள்ள குப்பைதொட்டியில் குப்பைகள் குவிந்து காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சாக்கடை கால்வாயையொட்டி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதுதவிர அதன் வழியாக செல்லும் குடிதண்ணீர் குழாய் சேதமடைந்துள்ளது. இதனால் குழாயில் இருந்து கழிவுநீர் கலந்து குடிதண்ணீர் வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளை அள்ளவும், செடி, கொடிகளை அகற்றி குழாயை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்