பெங்களூரு அசோக் நகர் கான்வென்ட் ரோட்டில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் மாநகராட்சியின் குப்பை வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, குப்பையை சேகரித்துவிட்டு தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியை நடைபாதையில் நிறுத்தி விடுகின்றனர். ஏற்கனவே குறுகலாக இருக்கும் அந்த நடைபாதையில் குப்பை வண்டியை நிறுத்துவதால் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் மாநகராட்சி அதிகாரிகள், குப்பை வண்டியை நடைபாதையில் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.