குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-05-14 08:17 GMT

கோவை சவுரிபாளையம் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றுவதோடு மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்