பெரம்பலூர் மாவட்டம், கிழுமத்தூர் கிராமத்தில் பெரும்பாலானோர் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். குறிப்பாக பட்டிசாலையில் அதிகளவு கழிப்பிடமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் பயன்படுத்துகிறார்கள். இந்த சாலை வழியாகத்தான் இப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு குழந்தைகள் சென்று வருகின்றனர். இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.