கோவை கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் பகுதியில் ஆங்காங்கே சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. அவற்றை கால்நடைகள் உண்ணும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும், பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.