தர்மபுரி பழைய கோர்ட்டு வளாகத்தின் அருகே தாலுகா அலுவலகம், வனத்துறை அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் பழைய கோர்ட்டு கட்டிடங்களை சீரமைத்து புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பகுதி அருகே உள்ள சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்ந்து பல நாட்கள் தேங்கி விடுவதால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் தேங்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்றவும் இந்தப் பகுதியின் சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, தர்மபுரி.
-மணி, தர்மபுரி.