பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள ரெங்கா நகர் பகுதியில், குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை அகற்றப்படாமல் சில நேரங்களில் தீ வைத்து கொளுத்தி விடுவதால் துர்நாற்றம் தாங்க முடியாமல் அப்பகுதி மக்கள் மூச்சு விடுவதற்கும் சிரமப்படுகின்றனர். அதில் சில நேரங்களில் பாம்புகளும் வந்து செல்கின்றன. பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பைகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.